திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மயிலாடும்பாறை , வள்ளி நகரை சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் வீட்டிலிருந்து பள்ளி வேண்டும் செல்வதற்காக நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வட மாநிலத்தை சார்ந்த ஒருவன் சிறுவனை கையைப் பிடித்து தரதரவென இழுத்து கடத்தி செல்ல முயன்றுள்ளான் . இதில் அதிர்ச்சி அடைந்த சிறுவன் அழுது கொண்டே கூச்சலிட்டுள்ளான். கூச்சலிட்ட சிறுவனின் முகத்தில் எச்சிலை துப்பியுள்ளான்.