இளையான்குடி அடுத்த சூராணம் பகுதியில் ₹1 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா திங்கட்கிழமை நடந்தது. விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் கலந்துகொண்டு பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். அதன்பின்பு சூராணம் பகுதியில் தனியார் பள்ளி அருகே ₹4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டடப்பட்ட பேருந்து பயணியர் நிழற்குடையை திறந்துவைத்தார். இதில் முன்னாள் எம்எல்ஏ சுப மதியரசன், இளையான்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் மாறன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.