திண்டுக்கல்லில் இந்த வருடம் ஆயுத பூஜையை முன்னிட்டு பொறி தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் இருந்து ஒரு கிலோ அரிசி 42 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி திண்டுக்கல்லிற்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு அரிசியை உப்புத் தண்ணீரில் ஊற வைத்து மேலும் அதனை பக்குவப்படுத்தி நன்கு காய வைத்து அதன் பின் வறுத்து பொறி தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் மழையின் காரணமாக ஆயுத பூஜை பொறி விற்பனை குறைவாக இருந்தது. இந்த வருடம் பொரி விற்பனை சூடுபிடித்துள்ளது.