புது வண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவரின் மனைவி சயினா தனது மூன்று வயது மகன் சமீரை பள்ளி முடிந்து அழைத்து வந்த போது குடிபோதை ஆசாமி ஒருவர் குழந்தை சமீரை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு வேகமாக சென்றதைப் பார்த்து பதறிய தாய் சயினா கத்தியபடி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்து போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் போலீசார் குழந்தையை மீட்டு குடிபோதை ஆசாமியை கைது செய்தனர்