கலங்காதன் கோட்டையில் இன்று மார்ச் 18 வின்சன்ட் ராஜ் என்பவரின் வைக்கோல் போர் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த இளையான்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான தீயணைப்புத் துறையினர், வைக்கோல் போரில் பற்றி எரிந்த நெருப்பை, லாவகமாக அணைத்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் இல்லை. கலங்காதேங்கோட்டையில் திடீரென வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.