ஏரல் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மொத்தம் 19 விநாயகர் சிலைகள் பொதுமக்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்திற்கும் நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வியாழக்கிழமை முற்பகல் முதல் மாலை வரை பிரதிஷ்டை செய்யப்பட்டு அனைத்து சிலைகளையும் எடுத்து வந்து ஏரல் தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர்.