ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகத்தில் சில வருடங்களாக AITUC தூய்மை பணியாளர் சங்க தலைவர் நாகலட்சுமி என்பவர் சில வருடங்களாக தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் தூய்மை பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக நாகலட்சுமி தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளார். இதனால் பழிவாங்கும் நோக்கில் ஜோலார்பேட்டை நகராட்சி நிர்வாகம் நாகலட்சுமி பணி நீக்கம் செய்துள்ளது.இதனால் ஜோலார்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் AITUC மற்றும் தொழிற்சங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.