சென்னை திருவள்ளூர் எம் பி சசிகாந்த் செந்தில் மாணவர்களின் நலக்கணக்காக முக்கியமான பிரச்சனை கையில் எடுத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார் இந்நிலையில் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவரை முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி சந்தித்து பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து சசிகாந்த் செந்தில் அவரது முடிவில் உறுதியாக இருக்கிறார் மீண்டும் மாலையில் அவரிடம் தலைவர்கள் பேச இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.