காரைக்குடியில் புதுமண தம்பதியின் அந்தரங்க வீடியோ எடுத்து ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய சித்த மருத்துவர் ஹரிஹரசுதன், கோகுல் சந்தோஷ், முத்துப்பாண்டி, ஒரு சிறார் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றியது தெரியவந்ததால், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சைபர் கிரைம் விசாரணை தொடர்கிறது. முக்கிய புள்ளிகளின் தொடர்பு இருப்பதாகவும், விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது