பெரம்பலூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் தரவுகளை செல்போனில் சேகரிக்க சொல்லி கட்டாயப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மேனகா தலைமை வகித்தார். ஜான்சி, அகில ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.