வாணியம்பாடி நியுடவுன் பைபாஸ் சாலையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் த.வெ.க, பாமக மற்றும் அதிமுக ஆகிய கட்சியிலிருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இன்று காலை இணைந்தனர். அவர்களுக்கு திமுக மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை MLA தேவராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது திமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.