கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவில், நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் மாந்திரீகம் செய்துள்ளனர். மண்டை ஓடு, பொம்மை போன்ற பொருட்களை வைத்து நடத்தப்பட்ட இந்த பூஜை, இன்று காலை அப்பகுதி மக்களால் கண்டறியப்பட்டது. 2,500-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த குடியிருப்புப் பகுதியில் நடந்த இச்சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது