ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே வேடல் ஊராட்சியில் புதிதாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நியாய விலை கடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதியதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையினை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.