மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா MVM பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 தினங்கள் நடைபெற உள்ளது. இந்த 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் மீது மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் வாருங்கள் ஓடுவோம், வாசிப்பை நோக்கி! என்ற தலைப்பில் குறிக்கோளுடன் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்