சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள சிஎஸ்ஐ ஓசன்னா ஆலயத்தில் நடந்த முப்பெரும் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டார். திருச்சபை பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் வரவேற்றார். 65ஆவது நீலச்சபை திருவிழா, ஆலய பிரதிஷ்டை பண்டிகை, திடப்படுத்துதல் ஆராதனை நடைபெற்றது. அனைத்து மதத்தவரும் பங்கேற்றனர். அமைச்சர் பேசுகையில், முதலமைச்சரின் நல்ல ஆட்சி சிறுபான்மையினரை பாதுகாக்கும் என்றும், அவரது பயணத்திற்கு வெற்றி தேடி, ஆட்சி தொடர ஆதரவு கோரினார்.