ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அஞ்சல் அலுவலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சரின் தனி பிரிவுக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. கல்புத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்து முன்னணி அமைப்பின் ஏற்பாட்டின் பேரில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் உயர்நிலைப்பள்ளி அமைத்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 400 க்கும் மேற்பட்ட தபால்களை முதலமைச்சரின் தனி பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்