ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் உள்ள G.K உலக பள்ளியில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திரகலா தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு கூடைப்பந்து மற்றும் நீச்சல் போட்டிகளை தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்வில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்