கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் மலையரசன், 50,. பூவேந்திரன்,70,. இருவரும் இன்று காலை டூவீலரில் கரும்பு வெட்டுவதற்காக மஞ்சக்கொல்லை கிராமத்திற்கு சென்றனர். அப்போது மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் இலந்தைகுளம் என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்ற போது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற கார் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.