ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் கூடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஜாதி மத பேதமின்றி கொண்டாடப்பட்டு வருகிறது கடந்த 60 ஆண்டு காலமாக அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்த ஆண்டு இதனை பிராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடத்துவதற்கு அதிகாரிகள் எதிர்த்ததாக தெரிகிறது இதனை கண்டித்து பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது