திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரிக்க முற்பட்டபோது காவல்துறையினர் அதனை கைப்பற்றி சென்றனர். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தி காங்கிரஸ் கட்சியினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.