நத்தம் சாலை ஆர்.எம்.டி.சி. காலனி அருகே ராதாரஜ் நகரில். மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை குடோனில் திடீரென தீ விபத்தில் ஏற்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் மின்மோட்டார் மற்றும் காயர் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை