ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்குட்பட்ட முர்துஜா நகர் பகுதியில் புதிதாக கழிவுநீர் இணைப்பு கால்வாய் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து மேல்விஷாரம் நகரமன்ற தலைவர் குல்சார் அகமது ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் புதிய கழிவுநீர் இணைப்பு கால்வாய் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்களோடு ஆலோசனை மேற்கொண்டார்