திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை-கருத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 24). இவர் தனது பைக்கில் கோட்டையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அரவங்குறிச்சி பகுதியில் சென்ற போது எதிரே வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலாஜிக்கு தலை, இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.