மேலப்பாளையம் அடுத்த குறிச்சி அக்ரகாரம் அருகே பாளையங்கால் வாயில் மூழ்கி மேலப்பாளையம் ஆமீன் புரத்தை சேர்ந்த ஷாஜகான் என்பவரது மகன் ஜாகிர் உசேன் பரிதாபமாக உயிரிழந்தார் நேற்று இரவு பாளையங்கால்வாயில் மூழ்கிய ஜாகிர் உசேன் உடலை இன்று காலை 10:30 மணியளவில் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மேலும் இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.