தென்காசி மாவட்டம் அறியப்பறம் கிராம த்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ குளத்தூர் ஐயன் ஆலயம் அமைந்துள்ளது இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஆவணி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் இந்த ஆண்டிற்கான ஆவணி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கோவில் கணபதி ஹோமம் வழிபாட்டுடன் விழா தொடங்கியது இதனை தொடர்ந்து விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் கேரள மாநிலம் குளத்துப்புழா ஐயப்பன் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்தவர் நிகழ்ச்சி நடைபெற்றது