கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகங்காத்தான் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமாரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.