சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கணக்கன்குடி வடக்கு கண்மாயில் சட்டவிரோதமாக மணல்/கரம்பை மண் அள்ளுவதைத் தடுக்க பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை சிவகங்கை மாவட்டம் கே.பொத்தனேந்தல் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராமேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.