திருப்பத்தூர் நகராட்சி சிவராஜ்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு மின் பொறியாளர் அலுவலகம் பகுதியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கிளை துவக்க விழா இன்று திட்ட தலைவர் ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. கோட்ட தலைவர் பாரதிதாசன், கோட்ட செயலாளர்கள் எழிலரசு, நந்தகுமார், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் மற்றும் மாநில செயலாளர் பங்கேற்றனர்.