பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பெரியம்மாபாளையத்தை சேர்ந்தவர் மணி. இவர் திருச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த மணி கடந்த இரண்டு நாட்களாக வெளியில் வரவில்லை. இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது மணி உயிரிழந்து உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது,