திமுக காஞ்சி தனி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக க. செல்வம் போட்டியிடுகிறார். இந்த நிலையில் சாலவாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட சித்தனக்காவூர், கிளக்காடி, சின்னாலம்பாடி, பாலேஸ்வரம், எடையம்புதூர், புலிப்பாக்கம், சாலவாக்கம், எடைமச்சி, பொற்பந்தல், அண்ணாத்தூர், சிறுபினாயூர் பகுதிகளில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.