நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில், காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே 35-ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றதுவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 10 அடி உயரம் கொண்ட அன்னப்பறவை மேல் அமர்ந்துள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன