விருத்தாசலத்தில் வாலிபர் சங்க மாவட்ட மாநாட்டு பேரணி வெள்ளிக்கிழமை மாலை ஆறு முப்பது மணி அளவில் தொடங்கியது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18 வது மாவட்ட மாநாடு விருத்தாசலத்தில் செப்டம்பர் 12மற்றும் 13 இரு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை ஒட்டி பேரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து தொடங்கி திருமுதுகுன்றம் நடைபெற்றது இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.