குளச்சல் அருகே செம் பொன்விளை பகுதியை சேர்ந்தவர் அருள் தாஸ் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் சம்பவ தினத்தன்று தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஆலுவிளை பகுதியில் வைத்து பைக்கை திருப்ப முயன்ற போது பின்னால் வந்த பைக் மோதியது இதில் படுகாயம் அடைந்தார் மோதிய பைக் நிற்காமல் சென்றது இது குறித்த புகாரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய நபரை தேடி வருகின்றனர்