விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் மாதம் தோறும் அமாவாசை நாட்களில் தமிழகம், கர்நாடக, ஆந்திர உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் வெள்ளிக்கிழமை இன்று ஆவணி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 90 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது