ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம் அருகே ஆற்காட்டில் இருந்து ராணிப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த காரின் முன்பக்க டயர் வெடித்து சாலையின் ஒரம் இருந்த தடுப்பின் மீது மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த நபர் காயமடைந்தார். இதனை தொடர்ந்து காயமடைந்த நபர் வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மீட்பு வாகனம் மூலம் கார் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது