வேடசந்தூர் போலீசார் லட்சுமணன் பட்டி நால்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கி பட்டியைச் சேர்ந்த மோகன் வயது 52 என்பதும் இவர் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து அவர் ரகசிய இடத்தில் வைத்திருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். சப் இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்கு பதிவு செய்து விசாரணை.