தூய்மைப் பணியாளர்களை ஒப்பந்த முறையை நியமனம் செய்வதை ரத்து செய்யக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் மக்கள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் மக்கள் பேரவை பொதுச் செயலாளர் பழனி ராஜன் தலைமை வகித்தார். தூய்மைப் பணியாளர்கள் நலச்சங்க தலைவர் காளிராஜன் முன்னிலை வகித்தார்.