தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மோப்பநாய் பிரிவிற்கு புதிதாக 2 நாய்க்குட்டிகளை வழங்கினார். தொடர்ந்து அந்த நாய் குட்டிகளை நன்கு பேணி பாதுகாத்து நன்றாக பயிற்சி வழங்க வேண்டும் என மோப்பநாய் படைப்பிரிவு காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினார். இதில் மோப்பநாய் பிரிவு போலீசார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.