திருப்பத்தூர் கிருஷ்ணகிரி பிரதான சாலையில் JCI நிறுவனம் மற்றும் தனியார் பள்ளியான விஜயசாந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் கொடியசைத்து போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.