பணம் கையாடல் செய்ததாக ராமநத்தம் பெண் காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்து டிஐஜி நடவடிக்கை எடுத்துள்ளதாக எஸ்.பி அலுவலக செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது. ராமநத்தம் காவல் ஆய்வாளர் பிருந்தா 75 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்து விட்டதாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைஅடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவரை பணி இடைநீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி உமா உத்தரவிட்டதாக எஸ்பி அலுவலக செய்த