வசங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் குடும்பத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த பக்தவச்சலம் என்பவர் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்தது. இந்த பிரச்சனை இருவரும் அப்பகுதி மீனவ கிராம பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் கூறி உள்ளனர். இவர்களது பிரச்சினையை விசாரித்த நிர்வாகிகள், ஆறுமுகத்தின் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகவும் தெரிவித்தனர். இந்த மன உளைச்சலில் ஆறுமுகத்தின் மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.