ஆவணி மாத அமாவாசையை ஒட்டி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உற்சவம் நடைபெற்றது. முன்னதாக உற்சவர் ஊத்துக்காடு அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பொருட்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு கோவில் வெளிப்புறத்தில் சுற்றி வந்து பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். மேலும் கோவில் வெளிப்புறத்தில் உள்ள மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்,