திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை சிக்னல் அருகே ஒரு பிரபலமான வணிக வளாகம் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் இன்று ஒரு அறையில் இருந்து திடீரென குபுகுபு என புகை வெளியே வந்தது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்