கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையில் 35 ஆண்டுகள் பணிபுரிந்து நிறைவு பெற்ற காவலர்களுக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்பி ஸ்டாலின் பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து காவலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்