ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திரகலா தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது பிரச்சினைகளை மனுக்கள் வாயிலாகும் நேரடியாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரியப்படுத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் முறையாக பரிசீலனை செய்து நிறைவேற்ற துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்