தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் வசித்து வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயமுருகன், திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரும் கடல் தொழில் செய்து வந்தனர். நேற்று இருவரும், மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி தெர்மல் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு தங்கள் வீட்டிற்கு திரும்பி வரும்போது தெர்மல்நகர் ரயில்வே பாலம் அருகே சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதி விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.