பாப்பாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்தது கடந்த 18ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் காசி தர்ம பகுதியில் உள்ள கேமராக்கள் சேதமடைந்து இருந்ததையும் ஒரு கேமரா காணாமல் போயிருந்ததும் தெரிய வந்தது இது குறித்து விசாரணை மேற்கொண்டு மற்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 3 பேரை இன்று மதியம் 12 மணி அளவில் கைது செய்தனர்