அனுப்பர்பாளையம் பகுதியை மாலைச்செல்வி என்பவர் திருப்பதியில் உள்ள தனது மகளை சந்தித்து விட்டு மீண்டும் வீடு திரும்ப சப்தகிரி விரைவு ரயிலில் சென்றுள்ளார். ரயில் காட்பாடி கடந்து லத்தேரி அருகே சென்றபோது மாலைச்செல்வியை நோட்டமிட்ட மர்ம நபர் பெண் கழுத்தில் அணிந்து இருந்த 3 சவரன் தாலி கொடியை அறுத்து சென்றுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சல் போட்டு உள்ளார். இரவு நேரம் என்பதால் அங்கிருந்து மாயமான மர்ம நபர் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.இது குறித்து அந்த பெண் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.