ஆர் எஸ் மங்கலம் அடுத்த கோவிந்தமங்கலம் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் பெண்களுக்கு 100 நாள் வேலை அளிக்கும்படி ஊராட்சி செயலரிடம் கேட்டால் 100 நாள் வேலை செய்த அவர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என கூறுவதால் அப்பகுதி பெண்கள் வாழ்வாதாரமின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர்.