ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிககளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பாம்பன் சாலை பாலத்தின் நடைபாதையில் பெரிய குழாய் பதிக்கப்பட்டு அதன் மூலம் காவிரி குடிநீர் தீவு மக்களுக்கு கொண்டுவரப்படுகின்றது. இந்த நிலையில் பாம்பன் சாலை பாலத்தில் கடந்த இரண்டு நாட்களாக காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் வரும் குடிநீர் பாலத்தின் தடுப்புச்சுவர் இடைவெளி வழியாக அதிக அளவில் கடலில் வீணாகிக் கொண்டிருக்கிறது.